பொலிசாரினால் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து கைதியொருவர் தப்பியோடிய சம்பவம் இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
எனினும், பொலிசாரும் சிறைக்காவலர்களும் கைதியை விரட்டிப் பிடித்து மீண்டும் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
மீண்டும் பிடிக்கப்படும் போது, தனக்கெதிராக 'பொய் வழக்கு' சோடிக்க முயற்சிப்பதாக சந்தேக நபர் அலறிய அதேவேளை, போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு பட்ட நபரே இவ்வாறு தப்பியோட முனைந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment