இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று பதவியேற்றார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பது சிறப்பம்சம். மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதியாக இறுதியாக கடமையாற்றியிருந்தார்.
சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இளவயதில் (43 வயது) பல்கலைக்கழக உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். கொரோனா சூழ்நிலை காரணமாக குறித்த சில பேரவை உறுப்பினர்களும், பல்கலைக்கழக மூத்த நிர்வாகிகள், பீடாதிபதிகள், சில முக்கிய பேராசிரியர்கள் மட்டுமே இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
- நூருல் ஹுதா உமர்
No comments:
Post a Comment