முன்னாள் ஆளுனர் அசாத் சாலி சார்பில் தொடரப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ்.
இப்பின்னணியில் வழக்கின் விசாரணை எதிர்வரும் 27ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ம் திகதி அசாத் சாலி நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவிக்கிறது. எனினும், தாம் அடிப்படையற்ற ரீதியில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அசாத் சாலி சார்பில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளமையும், ஏலவே ரிசாத் பதியுதீனின் வழக்கு விசாரணையிலிருந்தும் நீதிபதிகள் வழக்கு விசாரணை தினத்தில் விலகிக் கொண்டதன் பின்னணியில் விசாரணை தள்ளிச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment