தடுப்பூசி வழங்குவதற்கே 'லொக்டவுன்': அரசு - sonakar.com

Post Top Ad

Friday, 20 August 2021

தடுப்பூசி வழங்குவதற்கே 'லொக்டவுன்': அரசு

 


60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆகக்குறைந்தது முதலாவது தடுப்பூசியை வழங்கும் அடிப்படை நோக்கத்திலேயே நாடளாவிய லொக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஜனாதிபதி ஊடக பிரிவு.


தொழிற்சங்கங்கள், இடதுசாரி அரசியல் சக்திகள் திங்கள் முதல் நாட்டை முடக்குவதற்கான போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அவசரமாக லொக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், அதற்கான அடிப்படைக் காரணம் தடுப்பூசி வழங்குவதே என விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment