நாட்டின் வளர்ச்சியைக் கெடுத்து அதாள பாதாளத்துக்குள் தள்ளியுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் இன்று மற்றவர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்து வருவதின் பின்னணியில் வேறு திட்டங்கள் இருப்பதாக எச்சரிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.
போகிற போக்கில், அடுத்ததாக மக்கள் சேமிப்புக்காக வங்கிகளில் வைப்பில் வைத்திருக்கும் பணத்தில் கை வைப்பதே அரசின் திட்டம் என தெரிவிக்கும் அவர், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் என அனைத்திலும் ஊடுருவல் இடம்பெறப் போகிறது என்கிறார்.
கடந்த ஆட்சியில் வளர்ச்சி கண்டிருந்த அனைத்து அரச நிறுவனங்களும் தற்போது வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் பொருளாதாரத்தை நடைமுறை அரசு முழுமையாக சரித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment