தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சில் பணிப்பாளராக நாமல் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்த பாடகர் இராஜ் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், யோசித்த கன்னத்தில் அறைந்ததன் பின்னணியிலேயே இராஜ் பதவி விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளார் யோசித்த.
தான் இராஜை நீண்ட நாட்களாக காணவில்லையெனவும், இச்சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லையெனவும் யோசித்த விளக்கமளித்துள்ளார். பாடகரான இராஜுக்கு நாமல் வழங்கிய பதவி சமூக மட்டத்தில் அதிர்ச்சியலையை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment