இராணுவ தலையீட்டை நிறுத்த வேண்டும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday, 8 August 2021

இராணுவ தலையீட்டை நிறுத்த வேண்டும்: ரணில்

 


நாட்டில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டலினான குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதனை முழுமையாக இராணுவ மயப்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.


இராணுவத்தின் தலையீட்டினால் இது வரை நடப்பது 'ஊடக நாடகம்' மாத்திரமே என தெரிவிக்கின்ற அவர், விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார்.


12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment