பாதணிகளை வீட்டில் வைத்து விட்டுத்தான் இலங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றிருக்கிறார்கள் என அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்களால் தாம் பெரும் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் ஓட்ட வீராங்கனை நிமாலி லியனாராச்சி.
டோக்கியோ சென்றிருந்த வேளையில், தமது பாதணிகளுக்கு பதிலாக ஜப்பானில் கிடைக்கக் கூடிய உயர் தர பாதணிகள் சோடியொன்றைப் பெற்றுக் கொள்ள விரும்பிய போதிலும், ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற அனுமதியில்லாததால் அதிகாரிகளிடம் அதனைக் கூறி, பாதணிகளைப் பெற்றுத் தந்தால் அதற்கான பணத்தைத் தந்துவிடுவதாக கூறியிருந்ததாகவும், ஆனாலும் சம்பவத்தை திரிபு படுத்தி தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகவும் நிமாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பயிற்றுவிப்பளர்கள் சர்வதேச தரத்துக்கான பயிற்சிகளை வழங்கும் நிபுணத்துவத்துடன் இல்லையெனவும் நாமல் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்த அதேவேளை நாமல் டோக்கியோ செல்வதற்கு ராஜாங்க அமைச்சர் ரொஷான் விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொடுத்திருந்ததாக அவர் விளக்கமளிக்கவும் நேர்ந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
2017 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிமாலி லியனாராச்சி தங்கப் பதக்கம் வென்றவராவார்.
No comments:
Post a Comment