இலங்கையில் கொரோனா மரணங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கான வசதியின்றியும், சில இடங்களில் போதிய வசதியில்லாத சூழ்நிலையும் நிலவுகிறது.
இந்நிலையில், பதுளை மாவட்டத்தில் தினசரி 27 உடலங்களையே எரியூட்ட முடியும் என்பதால் மேலதிகமாக நிகழும் சாதாரண மரணங்களை எரியூட்டாது புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமய நம்பிக்கையின் அடிப்படையில் சாதாரண மரணங்களை எரியூட்டும் வழக்கமும் உள்ள சமூகத்தினர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment