நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ள நிலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலை பற்றி நாடாளுமன்றில் விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன, இலங்கையில் தயாரிக்கப்படும் ஒக்சிஜன் சிகிச்சைகளுக்காகவே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அடுத்த இரு வாரங்களுக்குள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை தினசரி 2000த்தைத் தாண்டியுள்ள அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment