இந்திய சுற்றுலாப் பயணிகளை அடுத்த வாரம் முதல் இலங்கை வர அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி, பசில் ராஜபக்ச மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இதனடிப்படையில் விமான சேவை நிறுவனங்களுக்கு தகவல் வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் 3 நட்சத்திர அல்லது அதற்கு உயர்வான ஹோட்டல்களிலேயே தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவுள்ள அதேவேளை, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
டெல்டா வகை கொரோனா பரவலினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் தொடர்ந்தும் தினசரி 25000க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment