கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள போதிலும் நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டி வரும் நிலையில் வெள்ளிக்கிழமைக்குள் அரசு தேசிய அளவிலான லொக்டவுனை அறிவிக்காவிட்டால் திங்கள் முதல் நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கப் போவதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
கொரோனா முகாமைத்துவம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய அளவிலான ஊரடங்கை அமுலுக்குக் கொண்டுவருமாறு பல முனைகளில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
எனினும், அரசாங்கம் தொடர்ந்தும் தயங்கி வரும் நிலையில் தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் சக்திகள் தாமாகவே களமிறங்கி நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment