குடியகல்வு குடிவரவு திணைக்கள அதிகாரிகள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சாதாரண கடவுச்சீட்டு வழங்கல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தளவான ஊழியர்களுடன் முடிந்த அளவான சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் கடவுச்சீட்டு வழங்கல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், முக்கிய தேவைகளின் அடிப்படையிலான ஒரு நாள் சேவை தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment