முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பிலான விசாரணை அறிக்கை நாளைய தினம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசாத் சாலியை நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் ஊடக சந்திப்பில் வைத்து அசாத் சாலி தெரிவித்த கருத்தொன்றின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ள அதேவேளை கடந்த ஐந்து மாதங்களாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment