நேற்றைய தினம் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் சுகாதார அதிகாரிகளினால் 14 நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த கல்முனையின் பிரபல தனியார் வைத்தியசாலை மீளத் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சோனகர்.கொம்முக்கு விளக்கமளித்த குறித்த வைத்தியசாலையின் நிறுவனர், தமது நிறுவனம் பிராந்தியத்தில் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும், பொது மக்கள் நலன் கருதி தமது ஊழியர்களை தொடர்ச்சியாக கொரோனா தொற்று பரிசோதனைக்குட்படுத்தி வருவதாகவும், இவ்வாறு நடந்த வழக்கமான பரிசோதனையையே நேற்றைய தினம் சுகாதார அதிகாரிகள் நடாத்தியதாக தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பில் ஆராய்ந்த சுகாதார அதிகாரிகள் வைத்தியசாலையை மீளத் திறந்து இயங்க அனுமதித்துள்ளதாகவும் தமது முன்மாதிரியை ஏனைய மருத்துவ நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment