நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் பிரதமருக்குத் தெரியாமல் நடந்திருப்பதாக பெரமுனவின் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பவித்ராவிடமிருந்து சுகாதார அமைச்சு பதவி பறிக்கப்பட்டமை அவருக்கு தெரியவே தெரியாது எனவும் அமைச்சு மாற்றப்பட்ட பின்னரும் சுகாதார அமைச்சு தொடர்பிலான விடயமொன்றை பேச மஹிந்த ராஜபக்ச பவித்ராவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்திருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு மேலும் முக்கிய பொறுப்புகளும் புதிய அமைச்சும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment