நாளை அசாத் சாலியின் வழக்கு விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 9 August 2021

நாளை அசாத் சாலியின் வழக்கு விசாரணை

 



மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்ஷா அல்லாஹ் நாளை 8ம் மாதம் 10ம் திகதி உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


குற்றப்புலனாய்வு காவலில் இருந்து தம்மை விடுவிக்க உத்தரவிடக் கோரி மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்ஷா அலலாஹ் நாளை 10ம் திகதி உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான துணை மன்றாடியார் நாயகம், திலீப பிரிஸ் கோரிக்கையின் பேரில் இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் 9ம் திகதி அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாக அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டம், பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில் அவரை குற்றப்புலனாய்வு துறையில் இருந்து விடுவிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு இயக்குனர், பொது பாதுகாப்பு அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.


2021 மார்ச் 9 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மனுதாரர், இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் முஸ்லிம் சட்டத்தின்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த முஹர்ரம் புது வருடத்தின் ஆரம்பத்தில் அவரின் விடுதலைக்காக அனைத்து மக்களும் இறைவனிடம் பிராத்திக்கவும்


- தேசிய ஐக்கிய முன்னணி

No comments:

Post a Comment