முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியை அரசும் எதிர்க்கட்சியும் மறுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கெஹலிய, மங்களவுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அதேவேளை, இன்று காலை மங்கள சமரவீர தனது உதவியாளர் ஒருவருடன் பேசியதாக ஹரின் பெர்னான்டோ விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மங்கள இறந்து விட்டதாக பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment