நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த யுவதி தங்கியிருந்த அறையின் சுவரில் 'இறப்பிற்கான காரணம்' (என் சாவுக்கு காரணம்) என எழுதப்பட்டுள்ளதாகவும் இதனை மேலும் ஆராய்வதற்காக கையெழுத்து நிபுணர்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ரிசாத் குடும்பத்தினர் சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யுவதியின் உடல் நிபுணர்கள் குழுவினால் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் தங்கியிருந்த இடத்திலும் மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளமையும் முன்னாள் வீட்டுப் பணிப்பெண்களை பொலிசார் தேடிச் சென்று வாக்குமூலம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment