நாட்டில் கொரோனா மரணங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் உடலங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், இவ்விவகாரத்துக்கு இராணுவம் தலையிட்டு தீர்வு வழங்கியுள்ளதாகவும் வைத்தியசாலைகள் மட்டத்தில் நிலவும் நிர்வாக குழறுபடிகளாலேயே தாமதம் நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
எரியூட்டல் அல்லது அடக்கம் செய்தல் விடயத்தில் உறவினர்களுடன் பேசி அதற்கான தீர்வை வழங்குவதில் இராணுவத்தினரும் இணைந்து இயங்கி, ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். குறிப்பாக கொழும்பு மாவட்ட வைத்தியசாலைகளில் இவ்விவகாரம் பாரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment