கொச்சிக்கடை தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய நபரின் தந்தை இரு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிரான சாட்சியங்களோ, விசாரணைகளோ இல்லாத நிலையில் அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லையென கொழும்பு மஜிஸ்திரேட் தெரிவித்ததையடுத்து அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரிவினர் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளமையும் மேலும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment