ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பில் முன் கூட்டியே தகவல் வழங்கியதன் பின்னணியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாவனல்லை தஸ்லீமுக்கு பொலிசார் 2.5 மில்லியன் ரூபா சன்மானம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட தஸ்லீம், உடல் ரீதியாக முடங்கியுள்ளதுடன் அவரது தியாகத்துக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில், அவரது பொது சேவையை மதித்து இரண்டு வருடங்களின் பின் இவ்வாறு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் இணைப்புச் செயலாளராக பணியாற்றியிருந்த தஸ்லீம், தீவிரவாதிகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையை உருவாக்கியிருந்தமையும் அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment