கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அவசியப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், பொருளாதார பாதிப்பின் பின்னணியில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கத் தயங்கி வருகிறது. இச்சூழ்நிலையில் இன்றைய தினம் இது தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, நேற்றைய தினம் சுகாதார அதிகாரிகளுடனான சந்திப்பில் நாட்டை மூடும் எண்ணமில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment