அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளை அழைத்து ஆராய்வதற்கு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முடிவு செய்துள்ளார். வீதி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புள்ள பிரச்சினைகள் குறித்து இதன் போது ஆராயப்படும்.
அதற்கமைய முதல் கட்டமாக, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளை அழைத்து ஆராயப்பட உள்ளது.
கேகாலை, பதுளை, கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் முதல் கட்டமாக அழைக்கப்படுவர். அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கவும் அமைச்சர் ஒழுங்கு செய்துள்ளார்.இதற்கு முன், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அமைச்சர்களுடன் வீதி அபிவிருத்தி குறித்து தனிப்பட்ட முறையில் ஆலோசிக்கப்படவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு ஏற்ப 100,000 கி.மீ வீதியை திறம்பட பயனுள்ள முறையில் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
- ஊடக பிரிவு
No comments:
Post a Comment