நேற்றைய தினம் (28) வெளியிடப்பட்ட கொரோனா மரண பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 212 மரணங்களுள் 173 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கொரோனா மரண எண்ணிக்கை தற்சமயம் 8583 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, லொக்டவுன் நீடிக்கப்பட்டால் அதனூடாக 10,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயினும், இலங்கையின் பொருளாதாரத நிலையைக் கருத்திற் கொண்டு நீண்ட நாட்கள் நாட்டை முடக்க முடியாது என அரச உயர் மட்டம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment