சீதுவ, கம்பஹா, வத்தளை, ஜா-எல பகுதிகளில் 500 ரூபா போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும் பொது மக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சீதுவ பகுதியில் இவ்வாறு 602 போலி நாணயத்தாள்கள், மடிக்கணிணி மற்றும் அச்சு இயந்திரத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நாணயத்தாள்கள் T/17 758552, T/17 758578 மற்றும் T/ 17-758779 போன்ற இலக்கங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment