இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த நான்கு தினங்களில் கண்டறியப்பட்டிருந்த 4,484 பேர் தொடர்பிலான தகவல் தாமதமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 403,285 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதுவரை 348,930 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
தற்சமயம், 49935 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment