ஈஸ்டர் தாக்குதல்: 25 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 August 2021

ஈஸ்டர் தாக்குதல்: 25 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு!

 



2019 ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் நீண்ட விசாரணைகளை நடாத்தி வரும் பொலிசார் பிரதான சந்தேகநபராக அறிவிக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.


நௌபர் மௌலவி, சாஜித் மௌலவி, கபூர் மாமா என அறியப்படும் ஆதம் லெப்பை உட்பட 25 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பயங்கரவாத திட்டமிடல், தயார் படுத்தல், வெடிபொருட்கள் வைத்திருந்தமை, கொள்வனவு செய்தமை உட்பட ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குறித்த நபர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment