யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment