இலங்கையில் திங்கட்கிழமையுடன் லொக்டவுன் நீக்கப்படின் மொத்த மரண எண்ணிக்கை 16,700 வரை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, செப்டம்பர் 18 வரை லொக்டவுன் அமுலில் இருந்தால் மரண எண்ணிக்கை 13,712 ஆக குறையவும், ஒக்டோபர் 2 வரை அமுலில் இருந்தால் மொத்த மரண எண்ணிக்கை 10,400 ஆக குறையவும் வாய்ப்பிருப்பதாக அவ்வமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நேற்றைய தினம் 209 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 8,157 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment