பாரம்பரிய வீட்டுக்குத் திரும்புவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு எவ்வித தயக்கமோ வெட்கமோ அவசியமில்லையென தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அவரை மீண்டும் தமது கட்சியில் இணைந்து நாட்டைக் காப்பாற்றும் பணியில் கை கோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ருவன் விஜேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்துள்ளதுடன் சஜித் தமது பாரம்பரியத்தைப் பேணி ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பட்டு சஜித் பிரேமதாச சமகி ஜனபல வேகயவை ஆரம்பித்து போட்டியிட்டிருந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment