கெரோனா விதிமுறைகள் எனும் போர்வையில் பொதுமக்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.
ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு சுகாதார விதி முறைகள் எனும் போர்வையில் அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வதாக சமகி ஜன பல வேகய குற்றஞ்சாட்டியுள்ளது. இதேவேளை, இதன் பொறுப்பு பொலிசாரையே சாரும் என நேற்றைய தினம் சரத் வீரசேக கருத்துரைத்திருந்தார்.
பல இடங்களில் மக்கள் வாழ்வாதாரமின்றி அவதியுறுவதோடு தமது ஆதங்கத்தை வெளியிடவும் முடியாத நிலையில் முடங்கிக் கிடப்பதாக எதிர்க்கட்சியினர் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment