PCR நடாத்திய தாதியை தாக்கிய பிக்கு கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 July 2021

PCR நடாத்திய தாதியை தாக்கிய பிக்கு கைது

 


பரிசோதனை நடாத்திய தாதியை மோசமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய பிக்கு ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


காய்ச்சலோடு ஆனமடுவ வைத்தியசாலைக்கு சென்றிருந்த நபருக்கு கட்டாய பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. எனினும், இதன் போது தனக்கு வலிப்பதாகக் கூறி கண்ணாடி பாத்திரத்தால் தாதியை தலையில் தாக்கியுள்ளார் பிக்கு.


இச்சம்பவத்தின் பின்னணியில் குமாரகம விகாரையைச் சேர்ந்த குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment