கடந்த பெப்ரவரி மாதத்தாடு ஒப்பிடுகையில் அப்போது இடம்பெற்றதை விட 50 வீதத்துக்கும் குறைவான அளவே தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் இதனூடாகவே தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைத்து வெளியிடப்படுவதாகவும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது தேசிய தொழிலாளர் சங்க முன்னணி.
சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பில் பெருமளவு குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுகின்ற அதேவேளை, அண்மையில் இடம்பெற்ற சுகாதார ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினையடுத்து தொற்றாளர் எண்ணிக்கை திடீரென வீழ்ச்சியடைந்திருந்தது.
தற்போது சராசரியாக தினசரி 1500 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்ற அதேவேளை தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment