15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தின் பின்னணியில் தன்னைத் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறையிட்டுள்ளார் கொட்டுவே பொடி ஹாமதுரு என அறியப்படும் தேரர்.
பௌத்த தர்ம பேச்சுக்கள் ஊடாக பிரபலமான குறித்த தேரர் தாம் அரசியல் ரீதியாக இலக்கு வைக்கப்படுவதாக கடந்த காலங்களிலும் தெரிவித்து வந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விசாரிக்கப்பட்டு வரும் பாலியல் விவகாரத்தில் தன்னைத் தொடர்பு படுத்தி தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேரர் முறையிட்டுள்ளார்.
No comments:
Post a Comment