கம்மன்பில விவகாரம்; முடிவெடுக்க தயங்கும் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 July 2021

கம்மன்பில விவகாரம்; முடிவெடுக்க தயங்கும் ஜனாதிபதி

 


உதய கம்மன்பிலவிடமிருந்து அமைச்சுப் பதவியை பறித்தாக வேண்டும் என்பதில் பெரமுனவின் ஒரு தரப்பு மிகத் தீவிரமாக இயங்கி வரும் நிலையில் இவ்விவகாரத்தில் ஜனாதிபதியின் அவதானம் வேண்டப்பட்டுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்கும் தவிர்ப்பதற்கும் அவரை அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவ்வாறு செய்வது பொருத்தமற்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது. கம்மன்பிலவுக்கு வேறு அமைச்சுப் பொறுப்பை வழங்குவதும் இத்தருணத்தில் ஏற்புடையதல்ல என அவர் பதிலளித்துள்ளார்.


எனினும், 20ம் திகதி வாக்கெடுப்பின் போது பெரமுன அதிருப்தியாளர்கள் கட்சிக்குள் இருக்கும் பிளவை வெளிப்படுத்தி விடக்கூடாது என்பதால் இது குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment