முஸ்லிம் விவாக - விவாகரத்து தனியார் சட்டமூலத்தினை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நீதியமைச்சர் முன் வைத்த பத்திரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது அமைச்சரவை.
முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ உரிமைகளைப் பேணுவதற்காக நூற்றாண்டுகளாக அமுலில் இருந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையென நீண்ட காலமாக குரல் கொடுக்கப்பட்டு வந்திருந்தது. 2009ல் இதற்கென உருவாக்கப்பட்ட அதி புத்திசாலிகளின் குழுவால் 11 வருடங்களாக ஒருமித்த கருத்தில் உடன்பட முடியாமலும் இருந்தது.
இந்நிலையில், நீதியமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது முன்மொழிவுகளை அமுலுக்குக் கொண்டு வருவதில் முனைப்பாக இயங்கி வருகிறார். அவர் தமது ஆலோசனைகளை ஏற்காது செயற்படுவதாக ஜம்மியத்துல் உலமா நோகாமல் தெரிவித்துள்ள போதிலும், இன்று அமைச்சரவை அனுமதித்துள்ளதன் பின்னணியில் வெகு விரைவில் முஸ்லிம் விவாக - விவாகரத்து பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment