யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வன்முறைக்குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது.
மேலும் எண்மர் சம்பவத்தில் காயமுற்றுள்ளதாகவும் முகக் கவசம் அணிந்த நிலையில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வேளையில், அங்கு தரித்திருந்த வாகனங்களும் சேதப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment