ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரியும் ஆண் நபர் ஒருவரின் கைத் தொலைபேசியைப் பெற்றுள்ள பொலிசார் அதிலிருந்து அழிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் மேலதிக தகவல்களைப் பெறுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இறந்து போன சிறுமி கல்வி கற்ற கிரிவந்தல பாடசாலை அதிபர் உட்பட மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமது குழந்தை கொல்லப்பட்டிருக்கக் கூடும் என பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment