மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும் கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருக்கும் நிலையில் பசில் ராஜபக்சவும் ஏன் அவசியப்படுகிறார் என வினவப்பட்ட கேள்விக்கு அவர் வந்தால் தான் முச்சக்கர வண்டி முழுமை பெறும் என பதிலளித்துள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
இவர்கள் மூவரும் ஒன்றிணைவது ஒரு முச்சக்கர வண்டி போன்றது எனவும் அதில் ஒரு சக்கரம் இல்லாவிட்டாலும் பயணம் தடைப்படும் என்பதால் பசிலின் வருகை அதனை நிவர்த்தி செய்யும் எனவும் அரசுக்கு பலமாக அமையும் எனவும் தெரிவிக்கிறார் நாமல்.
மூன்று சக்கரங்கள் இல்லாத முச்சக்கர வண்டி ஓடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமையும் பதவியேற்ற காலத்திலிருந்து பொருளாதார வீழ்ச்சி உட்பட பாரிய நெருக்கடிகளுக்கு அரசு முகங்கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment