வெளிநாட்டு தூதர்களை சந்தித்த பசில் - sonakar.com

Post Top Ad

Thursday, 15 July 2021

வெளிநாட்டு தூதர்களை சந்தித்த பசில்

 


நிதியமைச்சராக பதவியெற்றுள்ள பசில் ராஜபக்ச பல வெளிநாட்டு தூதர்களை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


அமெரிக்க , சீன, ரஷ்ய, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர்களை இவ்வாறு அவர் சந்தித்துள்ளதுடன் ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


பசுமைப் பொருளாதாரத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கமைவாக வெளிநாடுகளுடன் கூட்டுறவை வளர்த்துக்கொள்ளவுள்ளதாகவும் நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment