ஹிருனிகா அடிப்படை உரிமை மனுத் தாக்கல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 July 2021

ஹிருனிகா அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

 


மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளார் ஹிருனிகா பிரேமசந்திர.


ஜனாதிபதியின் செயலை சட்டத்தால் நியாயப்படுத்த முடியாது என தெரிவிக்கின்ற அவர், இதனூடாக இலங்கை அரசியல் யாப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள தனி நபர் பாதுகாப்பு உத்தரவாதமும் மீறப்பட்டுள்ளதாக தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஏலவே ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளினால் மீளுறுதி செய்யப்பட்டிருந்த தீர்ப்பினை மேவியதன் ஊடாக நீதித்துறையும் அவமதிக்கப்பட்டுள்ளதாக ஹிருனிகா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment