ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபே ஜன பல கட்சியின் அத்துராலியே ரதன தேரர் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றதற்கு எதிராக அடிப்படை உரிமை வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு நியமித்திருந்த கால எல்லையைத் தாண்டி இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை நிராகரிக்கப்பட வேண்டியவையெனவும் கோரி நாகானந்த கொடித்துவக்கு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
பல மாதங்கள் கடந்து இந்நியமனங்களை அனுமதித்ததன் ஊடாக தேர்தல் ஆணைக்குழு அரசியல் யாப்பினை மீறியுள்ளதாக அவர் தனது மனுவில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment