மேலும் ஒரு மில்லியன் சீன தடுப்பூசி வரவு - sonakar.com

Post Top Ad

Sunday, 4 July 2021

மேலும் ஒரு மில்லியன் சீன தடுப்பூசி வரவு

 


இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது சீனா. இவ்வாரம் மாத்திரம் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.


இந்நிலையில், தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 1.2 மில்லியன் பேர் இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதுடன் அன்னளவாக 3 மில்லியன் பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவில் பெருமளவு பாதிப்பை உருவாக்கிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் தீவிரமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment