சரியான நேரத்தில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் கம்மன்பிலவின் தன்னிச்சையான முடிவே இருப்பதாகக் கூறி அவருக்கு ஆளுங்கட்சியிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் அதேவேளை எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன் வைத்துள்ளனர்.
இதன் மீதான வாக்கெடுப்பு 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் சரியான நேரத்தில் அரசு விலையைக் குறைக்கும் என ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளமையும் தன்னைத் தோற்கடிப்பது அரசின் தோல்விக்கு சமனாகும் என கம்மன்பில தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment