பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதே அரசின் பொறுப்பெனவும் ரிசாத் பதியுதீனை பாதுகாப்பதற்கு முனையப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
ரிசாத் வீட்டில் மரணித்த சிறுமி விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் மலையகத்தில் ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. பல மனித உரிமை மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் போராட்டங்களை நடாத்தி வருகின்றன.
இந்நிலையில், ரிசாதின் வீட்டில் ஏலவே தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் வாக்குமூலங்கள் தரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment