மேல்மாகாணத்தில் சிறுவர்களை பணியிலமர்த்தியுள்ள இடங்களைத் தேடி விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
அண்மையில் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணித்ததன் பின்னணியில் இவ்விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில், வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment