ரிசாத் பதியுதீன் வீட்டில் இதற்கு முன்பாக பணி புரிந்த 11 பேரில் 09 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அதில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பலர் தாம் துன்புறுத்தப்பட்டதாக தற்போதைய விசாரணையில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய வீட்டுப் பணிப்பெண் மரணத்தின் பின்னர் ரிசாத் பதியுதீன் குடும்பத்தினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் முறைப்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இறந்த யுவதி ஹிஷாலினியின் இரண்டாவது பிரதே பரிசோதனையினை மேற்கொண்டுள்ள மூவர் கொண்ட குழுவின் அறிக்கையும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment