ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என தெரிவிக்கிறார் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க.
வைத்தியரிடம் குறித்த யுவதி தெரிவித்த கருத்துக்களே வலுப்பெறும் எனவும் அவரை யாரும் கொலை செய்ததற்கான சாட்சியங்கள் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, இறந்து போன நபருக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு சாட்சியங்கள் இல்லையெனவும் எனினும், இது தொடர்பிலான பிரதே பரிசோதனை நாளை இடம்பெற்ற பின்னர் இனியும் இவ்வாறான அநீதிகள் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment