ரிசாத் பதியுதீன் வீட்டின் பணிப் பெண்ணாகக் கடமையாற்றிய 16 வயது யுவதி இஷாலினியின் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த குறித்த யுவதியின் உடலை மூன்று நிபுணர்கள் கொண்ட குழு மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தவுள்ளது. பேராதெனிய வைத்தியசாலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 வயது முதல் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படும் யுவதி, தன்னைத்தானே எரியூட்டிக்கொண்டதாக வைத்தியசாலையில் வாக்குமூலமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment